Choa Chu Kang சூப்பர் மார்க்கெட் கொள்ளை முயற்சி 24 வயது இளைஞர் கைது!
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சோ சு கங் பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டைக் கொள்ளையடிக்க முயன்றதாக 24 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலை 3:15 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உலோகக் கம்பியுடன் சூப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்த அந்த நபர், கேஷியரின் கழுத்தில் அந்தக் கம்பியை வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இருப்பினும், பணம் கொடுக்க கேஷியர் மறுத்துவிட, எந்த காயமும் ஏற்படுத்தாமல் அங்கிருந்து அந்த நபர் தப்பியோடி உள்ளார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஜூரோங் காவல் துறையினர் விசாரணை மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் சந்தேக நபரை விரைவாக அடையாளம் கண்டனர்.
புகார் அளித்த இரண்டு மணி நேரத்திற்குள் அவரை கைது செய்து, ஆதாரமாக உலோகக் கம்பியை பறிமுதல் செய்துள்ளனர். திங்கட்கிழமை அந்த நபர் மீது கொள்ளை முயற்சி வழக்கு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட உள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தது இரண்டு ஆண்டுகள், அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் குறைந்தது ஆறு பிரம்படிகள் கிடைக்கும்.
குற்றவாளியை விரைவாக கைது செய்து நடவடிக்கை எடுப்பதன் மூலம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
image the CNA