சிங்கப்பூர் Workersக்கு Medical Test இல் உள்ள புதிய விதிமுறைகள்! Unfit ஆகும் அபாயம்!

0

முதன்முறையாக வேலைக்காக சிங்கப்பூர் வந்தாலும் அல்லது வேறு நாட்டிலிருந்து திரும்பினாலும் மருத்துவ பரிசோதனை கட்டாயம் தேவை. இந்த மருத்துவ பரிசோதனை உங்கள் உடலில் உள்ள சுகாதார பிரச்சனைகளை வெளிப்படுத்தும்.

மருத்துவ அறிக்கையில் எந்த பிரச்சனையும் இல்லை என்றால் உடனடியாக வேலையில் சேரலாம். இருப்பினும், மருத்துவ அறிக்கையில் நீங்கள் வேலைக்கு உகந்தவர் இல்லை என்று குறிப்பிடப்பட்டால், உங்கள் நாட்டிற்குத் திரும்ப வேண்டும். சிகிச்சை முடித்து, குணமடைந்த பிறகு மீண்டும் இங்கு வரலாம்.

நிறுவனத்தில் வேலை செய்யும் போது, மருத்துவ பரிசோதனையின் போது கண்டறியப்பட்ட மருத்துவ பிரச்சனைகளுக்கு நிறுவனம் பொறுப்பேற்கும். உங்களிடம் உள்ள வேலை அனுமதி (பாஸ்) அல்லது அனுமதிச் சீட்டு (பெர்மிட்) எதுவாக இருந்தாலும், சிங்கப்பூர் வந்த இரண்டு வாரங்களுக்குள் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது கட்டாயமாகும்.

மருத்துவ பரிசோதனையின் போது, சிறுநீர் பரிசோதனை போன்ற பல்வேறு பரிசோதனைகள் செய்யப்படும். இவை நீரிழிவு போன்ற நோய்களை சோதிக்க உதவும். மேலும் உங்கள் பார்வைத் திறனைப் பரிசோதிப்பதற்காக கண் பரிசோதனை செய்யப்படும். நீங்கள் ஒரு வாகன ஓட்டுநராக இருந்தால், வண்ணக்குறைபாடு பரிசோதனை (கலர் ப்ளைண்ட் டெஸ்ட்) அவசியம். எச்.ஐ.வி, காசநோய் போன்ற நோய்களைக் கண்டறியவும், சர்க்கரை அளவு, ஹீமோகுளோபின் ஆகியவற்றைச் சோதிக்கவும் இரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

பரிசோதனைகளுக்குப் பிறகு, ஒரு மருத்துவர் உங்களுடன் முடிவுகளைப் பற்றி விவாதிப்பார். உங்களுக்கு இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் பரிசோதனைகள் செய்யப்படும். ஒருவேளை உங்களுக்கு வேலைக்கு உகந்தவர் இல்லை என்று கண்டறியப்பட்டால், உங்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவீர்கள். அங்கு சிகிச்சை பெற்று, குணமடைந்த பின் மீண்டும் சிங்கப்பூருக்கு திரும்பி வரலாம்.

Leave A Reply

Your email address will not be published.