சர்க்கிள் லைனில் ரயில் பழுதால் புவோனா விஸ்டா முதல் பாயா லெபார் எம்ஆர்டி நிலையங்கள் வரை 30 நிமிட தாமதம்!
மே 20 காலை, சர்கிள் லைனில் உள்ள போட்டானிக் கார்டன்ஸ் மற்றும் ஃபேரர் ரோடு நிலையங்களுக்கு இடையில் ஏற்பட்ட ரெயில்வே கோளாறு பல பயணிகளுக்குத் தாமதத்தை ஏற்படுத்தியது.
காலை 8:26 மணிக்கு, பயலேபார் மற்றும் புவோனா விஸ்தா இடையே பயணிப்போர் சுமார் 30 நிமிடங்கள் கூடுதல் பயண நேரத்தை எதிர்பார்க்க வேண்டும் என SMRT தெரிவித்தது.
தாமதத்தை சமாளிக்க, செராங்கூன் மற்றும் புவோனா விஸ்தா இடையே இலவச பஸ்கள் இயக்கப்பட்டன. காலை 8:41 மணிக்கு ரெயில்வே சேவைகள் மெதுவாக திரும்பத் தொடங்கியதுடன், 8:50 மணிக்குள் முற்றிலும் வழமைக்கு வந்தன. அதையடுத்து இலவச பஸ் சேவையும் நிறுத்தப்பட்டது.
பின்னர், காலை 9:07 மணிக்கு SMRT கோளாறு காலை 8:15 மணியளவில் ஏற்பட்டதாக உறுதி செய்தது. அவர்கள், பரபரப்பான காலை நேர பயணத்தில் ஏற்பட்ட தொந்தரவுக்கு மன்னிப்பு கேட்டும், பயணிகளின் புரிந்துகொள்விற்கு நன்றி தெரிவித்தும் கூறினர்.