கடற்கரை சாலையில் 2022 இல் மனைவியைக் கொலை செய்ய முயன்ற குற்றத்தை நீதிமன்றத்தில் கணவர் ஒப்புக்கொண்டார்!

0

2022 ஏப்ரல் 14 அன்று, சிங்கப்பூர் பீச் ரோட்டில் உள்ள கடைகள் அருகே, 49 வயதான செங் குவோயுவான் என்பவர் தனது மனைவி ஹான் ஹோங்லியை சிறிய கோடரியால் பலமுறை வெட்டினார்.

அவர், தனது மனைவியின் முந்தைய திருமணத்தில் நடந்த விஷயம் வெளிவரக்கூடும் என்ற பயத்தில் இந்த தாக்குதலை செய்ததாக கூறப்பட்டது. இந்த தாக்குதலால் ஹான் இடது கண் பார்வையை இழந்ததோடு, முகத்தில் ஆழமான காயங்கள் ஏற்பட்டன.

தாக்குதலின் போது, முதலில் செங் ஒரு மரக்கைபிடி கத்தியால் தாக்கினார். அது முறிந்ததும், மற்றொரு கத்தியை சமையலறையிலிருந்து கொண்டு வந்து தொடர்ந்து தாக்கினார். ஹான் ஓட முயன்றபோது விழுந்ததால், செங் திடீரென தாக்கத்தை அதிகரித்தார். அருகில் இருந்தவர்கள் நாற்காலிகள் மற்றும் தடை கம்பிகளை வீசி அவரைத் தடுக்க முயற்சித்தனர். இந்தக் கொடூர சம்பவம் வீடியோவில் பதிவாகி சமூக ஊடகங்களில் பரவியது.

இந்த வழக்கில் செங் தன்னை குற்றவாளி என ஒப்புக் கொண்டார். அரசு தரப்பில் ஆயுள் தண்டனை மற்றும் பிரம்படி கோரப்பட்டது. ஆனால் செங் தரப்பு 15 வருட சிறைத்தண்டனை மட்டுமே வழங்க வேண்டும் என கோரப்பட்டது.

இறுதி தீர்ப்பு ஜூன் 3 அன்று வெளியாகும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.