கட்டிவைத்து மிரட்டி பணம் பறித்த 46 வயது நபர் கைது!

0

ஒருவரைக் கட்டிவைத்து, அவரிடமிருந்து பணத்தை மிரட்டி வாங்கிய குற்றத்திற்காக 46 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

காவல்துறை இதுபற்றி கூறியதாவது, செப்டம்பர் 11 அன்று மதியம் சுமார் 3:55 மணியளவில் தங்களுக்கு ஒரு புகார் வந்ததாகத் தெரிவித்தனர். ஒரு பெண் பேசுகையில், தனது ஆண் நண்பர் ஒருவர், (QR code) ஸ்கேன் செய்து, அதன் மூலம் டிஜிட்டல் பணம் (cryptocurrency) அனுப்புமாறு தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்ததாகக் கூறியுள்ளார்.

இதை நம்பி, அப்பெண் சுமார் 78,000 சிங்கப்பூர் டாலர் அனுப்பியுள்ளார். ஆனால், சிறிது நேரத்தில் ஏதோ தவறாக நடக்கிறது என அவருக்குச் சந்தேகம் ஏற்படவே, உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

தகவல் கிடைத்த வெறும் எட்டு மணி நேரத்திற்குள், காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு சந்தேக நபரைக் கைது செய்தனர். விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.

பாதிக்கப்பட்ட நபரை, கோல்மன் தெருவில் உள்ள ஒரு ஹோட்டலில் கேபிள் டைகளைக் கொண்டு கட்டிவைத்து, அவரிடமிருந்து 200,000 சிங்கப்பூர் டாலருக்கும் அதிகமான பணத்தை மிரட்டிப் பறித்தது தெரியவந்தது.

அப்பெண் அனுப்பிய பணம் முழுவதும் மீட்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பாதிக்கப்பட்டவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.