சோ சு கங் பகுதியில் கார் விபத்து 47 வயது பெண் காயம்!

0

மார்ச் 9 ஆம் தேதி சோ சு கங் பகுதியில் ஒரு கார் விபத்தில் 47 வயது பெண் ஒருவர் காயமடைந்தார். அவர் பயணித்த கார் கவிழ்ந்து விட்டதையடுத்து, அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

டெக் வாய் லேன், பிளாக் 26 அருகே இந்த விபத்து நள்ளிரவு 12:45 மணியளவில் நடந்தது.

விபத்து நடந்த இடத்தின் புகைப்படங்களில், சாலையின் நடுவில் ஒரு சாம்பல் நிற கார் தலைகீழாகக் கவிழ்ந்திருப்பதைக் காணலாம். தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அந்தப் பெண் மயக்க நிலையில் இல்லை.

காவல்துறையினரும், சம்பவத்தை வேடிக்கை பார்த்தவர்களும் அங்கு குழுமி இருந்தனர்.

விபத்து எப்படி நடந்தது என்பதை அறிய காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. கார் தானாகவே வழுக்கி விபத்துக்குள்ளானதாக நம்பப்படுகிறது.
image the straits times

Leave A Reply

Your email address will not be published.