சைனா டவுன் சின் ஸ்வீ ரோடில் பிளாக் 51-ல்56 வயது நபர் மரணம் இரண்டு கத்திகள் பறிமுதல்!

0

சைனா டவுன் பகுதியில் உள்ள சின் ஸ்வீ ரோடில் இன்று (நவம்பர் 8) அதிகாலை ஒரு கொலைச் சம்பவம் நடந்தது. பிளாக் 51-ல் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டின் வெளியே 56 வயது ஆண் ஒருவர். மயக்க நிலையில் காணப்பட்டார் காலை 3.10 மணியளவில் போலீசார் அவசர அழைப்பு பெற்றனர்.

அவர்கள் அங்கு சென்றபோது, ​​அந்த நபர் தனது பிளாட்டுக்கு வெளியே காயமடைந்து கிடந்தார், மேலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அவர் 17வது மாடியில் வசித்து வந்ததாக நம்பப்படுகிறது.

முதல் கட்ட விசாரணையில், நால்வருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு சண்டையாக மாறியதாக தெரியவந்துள்ளது. சண்டையின்போது ஒருவரால் கத்தி கொண்டு தாக்கப்பட்டு அந்த நபர் உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் இரண்டு கத்திகளும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

58 மற்றும் 59 வயதுடைய இரு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை (நவம்பர் 9) கொலை குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்படவுள்ளனர். இதில் 59 வயது ஆண் மீது போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளும் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், 36 வயது ஆண் ஒருவர், உயிரிழந்தவரின் நண்பராகவும், சண்டையில் ஈடுபட்டவராகவும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.