2024-ல் சிங்கப்பூர் நிறுவனங்களின் ஊதிய உயர்வு, புதிய ஆள்சேர்ப்பு!
சிங்கப்பூரில் பல நிறுவனங்கள் 2024 ஆம் ஆண்டில் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தவிருக்கின்றன.
மனிதவள அமைச்சின் (MOM) அறிக்கையின்படி, மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் இத்தகைய திட்டங்களைக் கொண்டுள்ளன. அதுமட்டுமின்றி, கிட்டத்தட்ட பாதி நிறுவனங்கள், ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் புதிய ஊழியர்களை வேலைக்கு சேர்க்க திட்டமிட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இந்த ஆண்டு மேம்படுத்தும் என்று MOM நம்பிக்கை தெரிவித்துள்ளது.
உலகளாவிய சந்தை மாற்றங்களின் காரணமாக சில துறைகளில் பணிநீக்கங்கள் இருக்கலாம் என்றாலும், அவை பொருளாதாரத்தை பெரிதாக பாதிக்காது.
கடந்த ஆண்டில் அதிக அளவில் பணிநீக்கம்
கடந்த ஆண்டில், குறிப்பாக கொரோனா காலக் கட்டத்திற்கு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், பணிநீக்கங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. 14,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையிழந்துள்ளனர், அதில் சுமார் 10,000 பேர் சிங்கப்பூர் குடிமக்கள்.
முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும், பணிநீக்கத்தில் இது ஆறு சதவீதம் அதிகரிப்பைக் குறிக்கிறது. இது வெளிநாட்டு தொழிலாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதைப்பற்றி MOM ஓர் அறிக்கையில் விளக்கமளித்துள்ளது.
பொருளாதாரம் பாதிக்கப்படாது
சிங்கப்பூர் நிறுவனங்களில் ஆண்டுதோறும் பணிக்குறைப்புகள் (downsizing) செய்வது வழக்கம் என்றாலும், சம்பள உயர்வு மற்றும் ஆள்சேர்ப்பு திட்டங்களுடன், 2024 க்கு நேர்மறையான வாய்ப்புகளை MOM இன் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.