வூட்லாண்ட்ஸ் சோதனைச் சாவடி விரிவாக்கம் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் நடவடிக்கைகள்.

0

சுற்றுச்சூழலுக்கு குறைந்த பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், சிங்கப்பூர் தனது வூட்லாண்ட்ஸ் சோதனைச் சாவடியை மேம்படுத்த 44 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்துகிறது.

வாகனங்கள் எல்லை தாண்டுவதில் ஏற்படும் தாமதத்தை தடுக்கவும், சோதனைச் சாவடியின் பரப்பளவை 95 ஹெக்டேராக அதிகரிக்கவும், 2024-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் தொடங்கி 2029-க்குள் முடிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

திட்டம் மேற்கு பகுதியில் இரண்டு கட்டங்களாகவும், கிழக்கு பகுதியில் ஒரு கட்டமாகவும் நடைபெறவுள்ளது. இந்த திட்டம் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கத்தை குறைக்கும் படியான வழிமுறைகளும் உள்ளன.

சுற்றுச்சூழலுக்கு குறைந்த பாதிப்பு

கடலோர உயிரினங்களைப் பாதிக்காமல் இருக்க, நிலம் கையகப்படுத்தப்படும் பகுதிகள் கவனமாக திட்டமிடப்படும். சேற்றுப் பகுதிகள், அலையாத்தி காடுகள் போன்ற உணர்வுமிக்க இடங்களில் இந்த விரிவாக்கம் தவிர்க்கப்படும்.

இந்த பகுதிகளுக்கு அருகில் கட்டுமானப் பணிகளை செய்வது தவிர்க்கப்படும். குறிப்பாக பறவைகள் குடியேற்ற காலங்களில் இந்த நடவடிக்கைகள் கைவிடப்படும். மக்களிடமிருந்து கருத்துக்கள் பெறப்பட்டு, சுற்றுச்சூழலை மேம்படுத்தும் திட்ட வரைவு உருவாக்கப்படும்.

வனவிலங்கு பாதுகாப்பு

வனவிலங்குகளைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். விலங்குகளை எதிர்கொள்ளும்போது எவ்வாறு செயல்படவேண்டும் என்பது பணியாளர்களுக்கு போதிக்கப்படும்.

பறவைக் கூடுகள் உள்ள மரங்கள், குஞ்சுகள் பறக்கத் தொடங்கும் வரை பாதுகாக்கப்படும். பறவைகளின் எண்ணிக்கையை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.

இது மனிதர்களின் குறுக்கீட்டை தவிர்த்து, பறவைகளை எண்ணுவதில் துல்லியத்தை அதிகரிக்கும்.

Leave A Reply

Your email address will not be published.