காக்கி புக்கிட் அவென்யூ 2ல்மரத்தில் மோதிய பஸ் ஓட்டுநர் உயிரிழப்பு, ஐந்து பயணிகள் காயம்!

0

நவம்பர் 21 ஆம் தேதி பிற்பகுதியில் காக்கி புக்கிட்டில் பஸ் மரத்தில் மோதியதில் 58 வயதான பஸ் ஓட்டுநர் இறந்தார்.

காக்கி புக்கிட் அவென்யூ 2 சந்திப்பில் இரவு 11 மணியளவில் விபத்து நடந்தது. 26 முதல் 38 வயதுடைய ஐந்து ஆண் பயணிகள் காயமடைந்தனர் காயமடைந்தவர்களை சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனைக்கு அனுப்பும் போது பஸ் டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

பஸ் புல்வெளியில் ஓடி மரத்தில் மோதியது பஸ் இன் முன்பகுதி பலத்த சேதம் அடைந்து, அதன் கண்ணாடி உடைந்ததை புகைப்படங்கள் காட்டுகின்றன. இந்த விபத்தின் போது அருகில் இருந்த தெருவிளக்கு ஒன்றும் கீழே விழுந்தது.

SBS டிரான்சிட் மூலம் இயக்கப்படும் சர்வீஸ் 137 வழித்தடத்தில் பேருந்து இருந்தது. விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொள்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.