பட்டாசு தொழிற்சாலையில் தீவிபத்து 6 பேர் பலி!
விருதுநகர் மாவட்டத்தில் அப்பைநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்து நடந்த போது 4 அறைகளில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதனால் தீ மேலும் பரவியது.
பட்டாசுக்கான இரசாயனங்களை கலக்கும் போது இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.