சுற்றுலா பேருந்து பள்ளத்தாக்கில் வீழ்ந்ததில் 13 பேர் உயிரிழப்பு!

0

தென்மேற்கு கொலம்பியாவில் வெள்ளிக்கிழமை காலை பேருந்து ஒன்று 150 மீட்டர் பள்ளத்தாக்கில் விழுந்ததில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர், மேலும் 30 பேர் காயமடைந்தனர்.

ஈக்வடார் எல்லைக்கு அருகில் உள்ள நரினோவில் மலைப்பாங்கான சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பிரபல யாத்திரை தலமான லாஸ் லாஜாஸ் சரணாலயத்திற்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து.

சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் இருவர் காயம் காரணமாக உயிரிழந்ததாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

காயமடைந்த 30 பேரில் பலர் படுகாயமடைந்து 8 வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்த பேருந்து ஓட்டுனர், சுங்கக் கட்டணம் செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக மாற்றுப் பாதையில் சென்றதால், விபத்து ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ இந்த சோகம் குறித்து வருத்தம் தெரிவித்ததுடன், காவல்துறை அவசரகால நடவடிக்கையை நிர்வகித்து வருவதாகக் கூறினார்.

இயந்திரக் கோளாறு மற்றும் வேகம் ஆகியவை விபத்துக்கான சாத்தியமான காரணங்களாக ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.