“டாலரை மாற்றினால் 100% வரி” – டொனால்ட் டிரம்பின் மிரட்டல்!

0

உலக வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை மாற்றும் திட்டங்களுக்கு எதிராக இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்ற பிறகு பேசிய டிரம்ப், பிரிக்ஸ் நாடுகளுடன் வர்த்தகம் செய்யும் போது 100% வரி விதிக்கப்படும் என மிரட்டல் விடுத்தார்.

டாலரின் பங்கைக் குறைப்பது கூட கடுமையான அபராதங்களுக்கு வழிவகுக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.

ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 10 நாடுகளின் குழுவான பிரிக்ஸ் புதிய கரன்சியை உருவாக்குவது உள்ளிட்ட பொருளாதார உத்திகள் குறித்து விவாதித்து வருகிறது. இருப்பினும், டாலரை மாற்றுவதையோ அல்லது பிரிக்ஸ் நாணயத்தை அறிமுகப்படுத்துவதையோ இந்தியா ஆதரிக்காது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெளிவுபடுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.