பள்ளி மாணவர்கள் தூங்கிக்கொண்டிருக்கையில் தீ விபத்து 17மாணவர்கள் உயிரிழப்பு!
சம்பாரா மாகாணத்தின் கவுரா நமோடா நகரில் உள்ள ஒரு இஸ்லாமிய மதப்பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வந்தனர். தீ விபத்து ஏற்பட்டபோது, மாணவர்கள் விடுதியில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
மீட்புக் குழுவினர் விரைந்து வந்து பல மாணவர்களை காப்பாற்றினர். இருப்பினும், இந்த விபத்தில் 17 மாணவர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தீ விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் காரணம் மற்றும் நிகழ்வு பற்றிய விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.