ஜப்பானில் காட்டுத்தீ: 100 வீடுகள் எரிந்து நாசம்!
ஜப்பானின் ஒபுனாடோவில் கடந்த வாரம் ஏற்பட்ட காட்டுத்தீ, அருகிலுள்ள நகரங்களுக்கும் பரவி 100க்கும் மேற்பட்ட வீடுகளை எரித்தது.
இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகியுள்ளன. மேலும், 6,500 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகி, அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
மக்கள் பாதுகாப்பாக வெளியேற அறிவுறுத்தப்பட்டதால், 1,200 பேர் அங்கிருந்து வெளியேறினர். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தீயை கட்டுப்படுத்த 2,000க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஹெலிகாப்டர்களின் உதவியுடன் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த காட்டுத்தீ, கடந்த அரை நூற்றாண்டில் ஜப்பானில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தாக கருதப்படுகிறது.