விற்கப்பட்ட குச்சி ஐஸில் பாம்புக்குட்டி!
தாய்லாந்தில், ஒரு நபர் குச்சி ஐஸ் வாங்கியபோது, அதன் மேற்பகுதி உருகிய நிலையில் அதற்குள் ஒரு பாம்புக்குட்டியின் தலை தெரிந்ததால் அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், ஐஸ் முழுவதுமாக உருகியபோது, அந்த பாம்பு முழுவதுமாக ஐஸ்க்குள் உறைந்து இருந்தது தெரியவந்தது.
விஷம் கொண்ட பாம்புக்குட்டி குச்சி ஐஸ்சுக்குள் இருப்பதைக் கண்ட அந்த நபர், அதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.