குவைத்தில் பிச்சை எடுத்த 11 வெளிநாட்டவர்கள் கைது – நாடுகடத்தும் நடவடிக்கை!
ரமலான் மாதத்தில் விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குவைத் அரசு அறிவித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக பிச்சை எடுக்கும் வெளிநாட்டினர் நாடு கடத்தப்படுவார்கள்.
மசூதிகள் மற்றும் சந்தைகளுக்கு முன்பாக பிச்சை எடுத்ததற்காக இதுவரை 8 பெண்கள், 3 ஆண்கள் உட்பட 11 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புனித மாதத்தில் இதுபோன்ற செயல்களை தடுக்க அதிகாரிகள் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
சரியான காரணமின்றி பொது இடங்களில் உணவு உண்பது, நீர் அருந்துவது அல்லது புகைபிடிப்பது யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசாங்கம் எச்சரித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் ரமலான் மரபுகளுக்கு மதிப்பளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.