ரஷ்யாவில் விமான விபத்து 48 பேர் பலி!

0

ரஷ்யாவின் தூர கிழக்கில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில், பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட 48 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அங்காரா ஏர்லைன்ஸால் இயக்கப்படும் இந்த விமானம், ரஷ்ய-சீன எல்லைக்கு அருகிலுள்ள பிளாகோவெஷ்சென்ஸ்கில் இருந்து டின்டா நகரத்திற்கு பறந்து கொண்டிருந்தபோது, ரேடாரில் இருந்து காணாமல் போனது.

பின்னர் தெற்கே உள்ள ஒரு காட்டு மலைப்பகுதியில் எரிந்து கொண்டிருந்த விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ரஷ்ய ஊடகங்கள் பகிர்ந்து கொண்ட படங்கள், விமானம் அடர்ந்த மரங்களுக்கு இடையில் சிதறிக் கிடப்பதையும், அந்த இடத்திலிருந்து புகை எழுவதையும் காட்டியது.

விமானம் இரண்டாவது முறையாக தரையிறங்க முயன்றபோது விபத்து நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமுர் பிராந்திய ஆளுநர் வாசிலி ஓர்லோவ், இறப்புகளை உறுதிப்படுத்தி, மூன்று நாட்கள் துக்க தினமாக அறிவித்தார்.

விபத்துக்கான காரணம் என்ன என்பதை புலனாய்வாளர்கள் இப்போது ஆராய்ந்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.