ஜூலை 17ல் $10 மில்லியன் டோட்டோ பரிசு காத்திருக்கிறது!
சிங்கப்பூரில் நடைபெறும் டோட்டோ லாட்டரியில், மூன்று தொடர் டிராக்களில் யாரும் முதலாம் பரிசை வெல்லாததால், ஜாக்பாட் தொகை சுமார் $10 மில்லியன் ஆக உயர்ந்துள்ளது.
இந்த பெரிய பரிசை வெல்ல ஒரு வாய்ப்பு ஜூலை 17 அன்று கிடைக்கவுள்ளது. பந்தயம் வைக்க விரும்பும்வோர், இரவு 9 மணிக்கு முன் பந்தயத்தை பதிவு செய்ய வேண்டும். வெற்றி எண்கள் இரவு 9.30 மணிக்கு வெளியிடப்படும்.
ஜாக்பாட் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜூலை 7 அன்று $1.2 மில்லியனாக இருந்தது, ஜூலை 10 அன்று $2.9 மில்லியனாகவும் பின்னர் ஜூலை 14 அன்று $5.8 மில்லியனாக உயர்ந்தது. ஆனால் அந்த டிராவிலும் வெற்றியாளர் எவரும் இல்லாததால், பரிசுத்தொகை இன்னும் பெரிதாகியுள்ளது.
இந்த நான்காவது டிராவிலும் யாரும் முதலாம் பரிசு வெல்லவில்லை என்றால், அந்த தொகை இரண்டாம் பரிசு (Group 2) வெற்றியாளர்களிடையே பகிரப்படும்.
கடந்த ஜூன் 19 அன்று நடந்த ஒரு டிராவில், வாங்கப்பட்ட ஒரு QuickPick சீட்டு மூலம் ஒரே நபர் $12.3 மில்லியன் ஜாக்பாட் பரிசை வென்றிருந்தார்.