மூத்த நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்! அவரது இறுதிச் சடங்கு நாளைநடைபெறும்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட நான்கு மொழிகளிலும் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை மற்றும் பத்ம விருது பெற்ற சரோஜா தேவி இன்று (ஜூலை 14) காலை பெங்களூருவில் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 87.
அவரது உடல் பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது, அங்கு அவரது ரசிகர்கள், உறவினர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வந்து இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அவரது இறுதிச் சடங்கு நாளை காலை 11 மணிக்குப் பிறகு அவரது கணவரின் மண்ணறை அருகே கோடிஹல்லி எஸ்டேட்டில் நடைபெறவுள்ளது.
சரோஜா தேவி திரைத்துறையில் பாராட்டப்பட்ட நடிகையாக மட்டுமின்றி, எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற தமிழ் சினிமாவின் மாபெரும் நடிகர்களுடன் நடித்தவர். “அபிநய சரஸ்வதி” என பாராட்டப்பட்ட இவர், பத்மஸ்ரீ, பத்ம விபூஷண் உள்ளிட்ட பல அரசியல் மற்றும் திரைப்பட விருதுகளையும் பெற்றவர். அவரது மறைவு திரைத்துறைக்கும், அவரது ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும்.