விமானத்தில் பணம் திருடிய சந்தேகத்தில் நபர் ஒருவர் கைது!

0

30 வயதான சீன நாட்டு நபர், ஜாங் யூக்வி, பிப்ரவரி 6ஆம் தேதி திருட்டு குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டார். அவர் பிப்ரவரி 4ஆம் தேதி தென் கொரியாவின் ஜேஜூ தீவிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் விமானத்தில் பயணியின் பையில் இருந்து 885 அமெரிக்க டாலர் (சிங்கப்பூர் $1,195) திருடியதாக கூறப்படுகிறது. அந்த பணம் ஒரு பையிற்குள் வைக்கப்பட்டிருந்தது.

பிப்ரவரி 5ஆம் தேதி, ஒரு பயணி ஜாங் தனது மேல்தட்டு அலமாரியில் இருக்கும் பையை தொடுவதை பார்த்து சந்தேகித்தார். அவர் பையை சரிபாரித்தபோது, சில அமெரிக்க டாலர்கள் இல்லாததை கவனித்து, அவர் பணத்தை திருடியிருக்கலாம் என்று சந்தேகித்தார்.

விமானம் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கியதும், போலீசார் கேபின் ஊழியர்களின் உதவியுடன் விசாரணை நடத்தி, காணாமல் போன பணத்தொகையை ஜாங் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகிலுள்ள மற்றொரு மேல்தட்டு அலமாரியில் கண்டுபிடித்தனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஜாங் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் எதிர்கொள்ள நேரிடலாம்.

Leave A Reply

Your email address will not be published.