கொழும்பு நீதிமன்றத்தின் சட்டத்தரணி வேடத்தில் வந்தநபர் சட்டப் புத்தகத்தில் துப்பாக்கியை மறைத்து வைத்திருந்தார்!
புதுக்கடை நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக சட்டத்தரணி போல் வேடமணிந்த சந்தேகநபர் ஒருவர் குற்றவியல் நடைமுறைச் சட்டப் புத்தகத்தில் மறைத்து வைத்து துப்பாக்கியை கடத்திச் சென்றுள்ளார். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதாள உலக நபர் கணேமுல்ல சஞ்சீவ உயிரிழந்தார்.
இச்சம்பவத்தையடுத்து, இந்த வழக்கு மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு சம்பவம் நீதிமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பிரதி பொது பாதுகாப்பு அமைச்சர் சுனில் வத்தகலவி அந்த இடத்திற்கு விஜயம் செய்து, பொது பாதுகாப்பு மற்றும் அரசாங்கத்தின் பதில் குறித்து ஊடகவியலாளர்களின் கடுமையான கேள்விகளை எதிர்கொண்டார்.
விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் உறுதியளித்த நிலையில், பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.