தம்பினிஸ் பகுதியில் பணம் கொள்ளையடித்த நபர் கைது!

0

நேற்று மாலை தம்பினிஸ் பகுதியில் பணம் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் 39 வயது நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஜூன் 3ஆம் தேதி மாலை 2.10 மணியளவில் தம்பினிஸ் சென்ட்ரல் 1 பகுதியில் உரிமம் பெற்ற ஒரு பணம் கடன் கொடுப்பவரை இவர் கொள்ளையடித்ததாக தெரிகிறது. முகமூடி மற்றும் தொப்பி அணிந்திருந்த அவர், கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர், கொள்ளையனிடம் $6095 பணத்தை கொடுத்துவிட்டு, அமைதியாக இருந்து, கொள்ளையனின் தோற்றத்தை நினைவில் வைத்துக் கொண்டார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினருக்கு பாதிக்கப்பட்ட நபர் கொள்ளையனின் தோற்றத்தை விரிவாக விவரித்தார்.

காவல்துறையினர் அங்கு வந்த சில நிமிடங்களிலேயே அந்த விவரங்களுக்குப் பொருந்தும் ஒரு நபரைக் கண்டுபிடித்து கைது செய்தனர். கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் கத்தியையும் மீட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர் மீது ஆயுதமேந்திய கொள்ளை வழக்கு பதியப்பட்டு, (ஜூன் 4) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 3 முதல் 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் குறைந்தது 12 பிரம்படி தண்டனை விதிக்கப்படலாம்.

பாதிக்கப்பட்டவரின் துல்லியமான விவரிப்பு மற்றும் காவல்துறையினரின் விரைவான நடவடிக்கையால் குற்றவாளி விரைவில் கைது செய்யப்பட்டதாக, உதவி காவல்துறை ஆணையர் ஜஸ்டின் வோங் பாராட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.