சிங்கப்பூருக்கு June மாதம் செல்லும் போது, Pass மற்றும் Permit களுக்கு தேவையான முக்கியமான Documents என்னென்ன?
சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்லும் போது, சிங்கப்பூர் வேலைக்கான வெவ்வேறு Pass மற்றும் Permit களுக்கு தேவையான Documents மாறுபடும்.
ஒரு Document கூட எடுத்துச்செல்ல தவறினால், நீங்கள் மீண்டும் நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட வாய்ப்பு அதிகம். உங்கள் Documents இல் குறிப்பிட்ட விவரங்கள் அனைத்தும் பிழையின்றி சரியாக உள்ளனவா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
சில நேரங்களில், உங்கள் Passport, Visa மற்றும் ஏனைய Documents களில் உள்ள பெயர், முகவரி போன்ற விவரங்கள் சரியாக உள்ளனவா என்பதையும் கவனிக்க வேண்டும். சில Typing பிழைகள் காரணமாக, Visa வரும் போது உங்கள் விவரம் பொருந்தவில்லை என்றால், சிங்கப்பூர் செல்ல முடியாமல் போகும்.
சிங்கப்பூருக்கு முதன் முறையாக செல்கிறீர்கள் எனில், Onboard Slot, Room Registration Certificate போன்றவற்றையும் எடுத்துச்செல்ல வேண்டும். சில Documents எடுத்துச்செல்ல தவறினால், Airport இல் வைத்தே உங்களை திருப்பி அனுப்பி விடுவார்கள்.
இப்போது, எந்த Pass, Permit க்கு என்ன Documents தேவை என்பதை விரிவாக பார்ப்போம்:
EPass, SPass, NTS Permit போன்றவற்றிற்கு RMI Certificate (Risk Management Intelligence) வேண்டப்படலாம். RMI Certificate கட்டாயம் அல்ல, ஆனால் எடுத்துச்செல்லுவது சிறந்தது.
EPass க்கான Documents: Visa, Passport, SG Arrival Card, Vaccine Certificate, Ticket, மற்றும் Room Registration Certificate ஆகியவை கட்டாயம்.
Vaccine Certificate, Fully Vaccinated ஆக இருக்க வேண்டும், மேலும் அதில் உங்கள் Passport Number இருக்க வேண்டும்.
சிங்கப்பூர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட Vaccine போடப்பட்டிருக்க வேண்டும். தற்போது, சிங்கப்பூரில் கொரோனா தொற்றின் அலை காரணமாக Vaccine Certificate மிக முக்கியம்.
SPass க்கு தேவையான Documents, EPass க்கு தேவைப்படும் Documents உடன் ஒரே மாதிரியானவை.
NTS Permit இல் செல்பவர்கள் Visa, Passport, SG Arrival Card, RMI Certificate, Vaccine Certificate, Bond Paper மற்றும் Room Registration Certificate என்பவற்றை எடுத்துச்செல்ல வேண்டும்.