காதல் தோல்வி காரணமாக ஆட்டுக்குட்டியை மணமுடித்த இளைஞர்!

0

மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் பகவான் சிங், தனியாக வளர்த்த ஆட்டுக்குட்டியுடன் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

அவர் காதலில் தோல்வியடைந்ததால் இந்த தீர்மானத்தை எடுத்ததாக கூறப்படுகிறது. இந்து மரபுப்படி, தனது ஆட்டுக்குட்டியின் கழுத்தில் மாலையிட்டு, பொட்டு வைத்து திருமண நிகழ்வை நடத்தினார்.

அத்துடன், அந்த ஆட்டுக்கு “பூஜா” என்று பெயரிட்டதோடு, திருமணத்தின் புகைப்படங்களையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். “நான் இதை பல மாதங்களாக வளர்த்து வந்தேன், இது எனக்கு மிகவும் நேசமானது. அதனால் இந்த முடிவை எடுத்தேன்” என அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.