வாகனம் ஓட்டும் போது லேப்டாப்பில் வேலை செய்த இளம்பெணுக்கு அபராதம்!
பெங்களூருவில், ஒரு இளம்பெண் வாகனம் ஓட்டும் போது மடிக்கணினியில் வேலை செய்ததால் காவல்துறை ரூபா1,000 அபராதம் விதித்தது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, அதிகாரிகள் அவளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்தனர்.
காவல்துறை துணை ஆணையர் இந்த விவகாரத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து, வாகனம் ஓட்டும்போது வேலை செய்வதை தவிர்க்க வேண்டுமென்று மக்களுக்கு நினைவூட்டினார். அவர், “வீட்டில் இருந்து வேலை செய்யலாம், ஆனால் வாகனம் ஓட்டும்போது இல்லை!” என எச்சரித்தார்.
இந்த சம்பவம், சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. விபத்துகளை தவிர்க்கவும், பாதுகாப்பாக பயணிக்கவும், வாகனம் ஓட்டும் போது முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என்று காவல்துறை வலியுறுத்தியுள்ளது.