விமானத்தில் கரப்பான்பூச்சிகள் பயணிகள்புகார் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!
சான் பிரான்சிஸ்கோவில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் கரப்பான்பூச்சிகள் காணப்பட்ட சம்பவத்திற்கு விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
இரு பயணிகள் இந்த கரப்பான்பூச்சிகளைக் கண்டு, விமான ஊழியர்களிடம் உடனடியாகத் தெரிவித்தனர்.
விமான ஊழியர்கள் பயணிகளை வேறு இருக்கைகளுக்கு மாற்றினர். விமானம் கொல்கத்தாவில் தரையிறங்கியதும், விமானம் முழுமையாகச் சுத்தம் செய்யப்பட்டது.அதன் பிறகே மும்பைக்குப் புறப்பட்டது.
சுத்தம் செய்த பிறகும் கரப்பான் பூச்சிகள் விமானத்திற்குள் வர வாய்ப்புள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கிவிட்டதாகவும், மீண்டும் இதுபோல நடக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் ஏர் இந்தியா உறுதி அளித்துள்ளது.