கர்ப்பிணி பெண்ணின் குழந்தைக்குள் இன்னொரு கரு – மருத்துவ உலகை அதிர்ச்சியுறச் செய்த நிகழ்வு!
மகாராஷ்டிரா மாநிலத்தின் புல்தானா மாவட்டத்தில் 35 வயது கர்ப்பிணி ஒருவர் மருத்துவ பரிசோதனைக்கு சென்றபோது, அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அவரின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் உடலுக்குள் இன்னொரு கரு வளர்ந்து வருவது மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
இது மிகவும் அரிதான நிலை என்றும், உலகளவில் இதுவரை 200 பேருக்கு மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வு மிகக் குறைவானவர்களுக்கே ஏற்படும் விஷயம். கருவில் வளர்ந்துள்ள குழந்தையின் உடலுக்குள் இன்னொரு கரு உருவாகியுள்ளது, ஆனால் அது முழுமையாக வளராத நிலையில் உள்ளது. இப்போது மருத்துவர்கள் முக்கிய முடிவு எடுக்க வேண்டும்.
முதலில், கர்ப்பிணிப் பெண் தனது குழந்தையை பிறக்க வைத்த பிறகு, அந்த குழந்தையின் உடலுக்குள் இருக்கும் கருவை எப்படி கையாளுவது என்பதை மருத்தவர்கள் ஆலோசிக்க உள்ளனர். இதுபற்றி மருத்துவ உலகம் பெரும் ஆச்சரியத்துடன் கவனம் செலுத்தி வருகிறது.