சிங்கப்பூரில் தலைமறைவான ஓட்டுநரை தேடும் அதிகாரிகள்.
மார்ச் 23 ஆம் தேதி இரவு, கெய்லாங் பகுதியில் ஒரு கார் இரண்டு பாதசாரிகளை மோதிவிட்டு நிற்காமல் சென்ற சம்பவத்தில், அந்த கார் ஓட்டுநரை சிங்கப்பூர் அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில், சாலையைக் கடந்து கொண்டிருந்த இரண்டு பாதசாரிகளை கார் ஒன்று மோதியதில், அவர்கள் தூக்கி வீசப்படுவதையும், பின்னர் கார் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்வதையும் காணலாம்.
விபத்தில் சிக்கியவர்களான 51 வயது ஆணும் 32 வயது பெண்ணும் சுயநினைவுடன் தான் டாக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மற்றொரு வாகனத்தின் கேமராவில் பதிவான இந்த காட்சியில், சம்பவத்திற்குப் பிறகு கார் சற்று வேகத்தை குறைத்துவிட்டு, பின்னர் அங்கிருந்து செல்வதை காட்டுகிறது.
சிம்ஸ் அவென்யூவில், சிம்ஸ் அவென்யூ கிழக்கு நோக்கி, கெய்லாங் லோராங் 19 அருகே இரவு 11:40 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது.
ஓட்டுநரை அடையாளம் கண்டு கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகள் தொடர்கின்றன.