நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் கவனக்குறைவான வாகன ஓட்டுநர்!

0

கடந்த மார்ச் 23 ஆம் தேதி, வூட்லண்ட்ஸ் அவென்யூ 12-ல், அதிவேகமாக வந்த கார் ஓட்டுநர் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் மோதிய பின்னர், மோட்டார் சைக்கிளிலும், ஓட்டுநரின் மீதும் காரை ஏற்றிவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

47 வயதான அந்த கார் ஓட்டுநர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

ஃபேஸ்புக்-ல் வெளியான வீடியோ காட்சியில், சாலையின் இடது ஓரத்தில் காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொள்வதைக் காணலாம்.

விபத்தில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் புல்வெளிக்குள் விழுந்து கிடக்க, அவர் தனது வாகனத்தை நிமிர்த்த முயற்சிக்கிறார்.

இந்த சமயத்தில், கார் அங்கிருந்து சென்றுவிட, பின்னால் இருந்த ஒருவரைக் காப்பாற்ற ஓடிவரும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மீது காரை மீண்டும் ஏற்றிவிடுகிறார் அந்த ஓட்டுநர்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக போக்குவரத்து போலீஸ் மற்றும் வூட்லண்ட்ஸ் போலீஸ் பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், சம்பவம் நடந்து மூன்று மணி நேரத்திற்குள் குற்றவாளியை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

மார்ச் 25 ஆம் தேதி குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். கவனக்குறைவாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதற்காக அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை அல்லது $5,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

image FROM SG ROAD VIGILANTE/FACEBOOK

Leave A Reply

Your email address will not be published.