மலேசிய விரைவுச்சாலையில் விபத்து சிங்கப்பூர் இளைஞர்கள் உயிரிழப்பு!

0

சிங்கப்பூரிலிருந்து இரு இளைஞர்கள் மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் நடந்த விபத்தில் சோகமாக உயிரிழந்தனர்.

மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். சிங்கப்பூரிலிருந்து பகோ நகரை நோக்கி, சஹூர் உணவிற்காக இவர்கள் எட்டு பேர் கொண்ட குழுவாக மோட்டார் சைக்கிளில் பயணித்திருக்கலாம் என கருதப்படுகிறது.

பயணத்தின் போது, ஒரு மோட்டார் சைக்கிள் டயர் பஞ்சரானதால், அந்த ஓட்டுனர் யோங் பெங் என்ற இடத்தில் உள்ள ஓய்வு பகுதியில் நிறுத்தினார்.

மற்ற ஏழு பேரும் அவருக்காக அவசர வழித்தடத்தில் காத்திருந்தனர். திடீரென்று, கட்டுப்பாட்டை இழந்த ஒரு லாரி, அவசர வழித்தடத்தில் நின்றிருந்த குழுவின் மீது மோதியது.

விபத்தில் ஈடுபட்ட லாரி ஓட்டுநருக்கு வயது 33, அவருடன் உதவியாளர் ஒருவரும் (வயது 29) பயணித்துள்ளார். உயிரிழந்த இரு ஓட்டுநர்களின் வயதும் 26 ஆகும்.

Leave A Reply

Your email address will not be published.