பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மீது கத்திக்குத்து தாக்குதல்!
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் வியாழக்கிழமை (ஜனவரி 16, 2025) அதிகாலை மும்பையில் உள்ள அவரது பாந்த்ரா இல்லத்தில் மர்மநபர் அவரை கத்தியால் தாக்கியதில் காயமடைந்தார்.
சத்குரு ஷரன் கட்டிடத்தில் உள்ள அவரது 12வது மாடி வீட்டில் அதிகாலை 2:30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தாக்குதல் நடந்த உடனேயே ஊடுருவிய நபர் அங்கிருந்து தப்பியோடினார்.
சைஃப்பின் முதுகுத்தண்டிற்கு அருகில் உள்ள காயம் உட்பட ஆறு காயங்கள் ஏற்பட்டன. லீலாவதி மருத்துவமனையின் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர், அவரது குழுவினரின் கூற்றுப்படி, அவர் குணமடைந்து தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
இச்சம்பவத்தின் போது வேறு யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில், குடும்பத்தினர் பாதுகாப்பாக உள்ளனர்.
வீட்டை கொள்ளையடிக்கும் நோக்கம் கொண்ட நபர் ஊடுருவியதை போலீசார் உறுதி செய்துள்ளனர். சந்தேக நபரை அடையாளம் கண்டு பிடிக்கும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.