புக்கிட் திமா அதிவேக சாலையில் விபத்து மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயம்!

0

திங்கட்கிழமை காலை வேளையில் (மே 20), புக்கிட் திமா அதிவேகசாலையில் (BKE) ஒரு விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டர்ஃப் கிளப் அவென்யூ அருகே, வூட்லேண்ட்ஸ் நோக்கிச் செல்லும் வழியில், ஒரு கார் திடீரென வந்ததால், அதைத் தவிர்க்க ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தன் வண்டியை விட்டு குதித்து அருகில் சென்ற பேருந்தின் மீது மோதினார்.

இந்த விபத்தில் பேருந்தின் கண்ணாடி நொறுங்கியது, அதிர்ஷ்டவசமாக மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த விபத்து ஒரு பெரும் சங்கிலித் தொடர் விபத்தை ஏற்படுத்தியது, மொத்தம் ஐந்து வாகனங்கள் இதில் சிக்கிக்கொண்டன. விபத்தை ஏற்படுத்திய கார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இந்த விபத்தின் புகைப்படங்களும் காணொளிகளும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பலத்த சேதமடைந்த பேருந்தின் படங்கள் நம்மை அதிர வைக்கின்றன.

விபத்தில் சிக்கிய பேருந்து மலேசியாவில் இருந்து வந்த தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து என்றும், அதன் கண்ணாடி நொறுங்கி பெரும் ஓட்டை விழுந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

காலை 8:20 மணிக்கு காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதில் காயமடைந்த 24 மற்றும் 33 வயதுடைய இரண்டு இளைஞர்கள் கூ தேக் புவாட் (Khoo Teck Puat) மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.