சாங்கி விமான நிலையம் அருகே கார் விபத்துபெண் பயணி சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதி!
Airport Boulevard சாலையில் நேற்று (ஆகஸ்ட் 20) மாலை 6 மணியளவில் சாங்கி விமான நிலையம் அருகே ஒரு விபத்து நடந்தது. ஒரு பக்க சாலையில் இருந்து திரும்பிய சிகப்பு நிற கார் ஒன்று கருப்பு நிற கார் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்தது.
இவ்விதத்தில் கருப்பு நிற காரின் முன்பக்கம் பலத்த சேதமடைந்தது. மோதிய வேகத்தில் கருப்பு கார் முன்னோக்கி சென்று சாலையின் தடுப்பு சுவரில் மோதி நின்றது. இந்த விபத்தை காவல்துறை உறுதி செய்தது.
சிகப்பு நிற காரை ஓட்டி வந்த 74 வயது மதிக்கத்தக்க முதியவர் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருடன் பயணித்த 74 வயது மதிக்கத்தக்க பெண் பயணி சுயநினைவின்றி மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.