செங்காங்கில் கிரேன் விபத்து போக்குவரத்து மீண்டும் சீரானது!

0

செங்காங்கில் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற்ற கிரேன் விபத்தை அடுத்து, பாதிக்கப்பட்ட புங்கோல் சாலையில் இருந்து கிரேன் அகற்றப்பட்டு மறுநாள் மதியம் முதல் போக்குவரத்து வழக்கம் போல் நடைபெறுகிறது.

விபத்தின் காரணமாக சாலையில் ஏற்பட்ட எண்ணெய் கசிவை சரி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருப்பதை அருகில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.

காலை 9:30 மணியளவில் சாலையை சீரமைக்கும் பணிகள் தொடங்கியதாகவும், மதியம் 12:15 மணியளவிலும் நான்கு வழிச்சாலையில் பணிகள் தொடர்ந்ததாகவும் சாட்சிகள் கூறுகின்றனர்.

அருகிலுள்ள கட்டுமான தளத்தில் இருந்து கிரேன் விழுவதற்கு சில நொடிகளுக்கு முன்பு வேன் ஓட்டுனர் தப்பித்ததை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

கிரேன் ஒரு டிரெய்லரில் ஏற்றப்படும்போது சரிந்து விழுந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்தில் சிக்கிய 28 வயது வேன் ஓட்டுனர் காயங்களுடன் செங்காங் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் சுய நினைவுடன் இருப்பதாக கூறப்படுகிறது. 49 வயதான கிரேன் இயக்குனர் அஜாக்கிரதையாக செயல்பட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

Compassvale Street சந்திப்புக்கு அருகில் நடந்த இந்த விபத்தால் புங்கோல் சாலையின் நான்கு வழித்தடங்களும் முற்றிலுமாக முடங்கின.

தேசிய நீர் முகமையான PUB-ன் திட்டத்திற்கு சொந்தமான கிரேன் பக்கவாட்டில் சாய்ந்து, அதன் உயரமான பகுதி சாலையைக் குறுக்காக அடைத்தபடி வேனின் மீது விழுந்தது.

கட்டுமான நிறுவனமான Building Construction Co, காவல்துறை மற்றும் மனிதவள அமைச்சகத்துடன் இணைந்து நடத்தப்படும் விசாரணைகளுக்கு ஒத்துழைக்கும்.

image The straits times

Leave A Reply

Your email address will not be published.