துபாய் அரசு இந்தியர்களுக்கு புதிய விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது!
ஐந்து வருடங்கள் வரை பலமுறை வருகை தரக்கூடிய புதிய வகை விசாவை இந்தியர்களுக்கு துபாய் அரசு வழங்குகிறது. துபாயின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலா அமைச்சின் அறிக்கையின்படி, 2023-ம் வருடத்தில் சுமார் 25 லட்சம் இந்தியர்கள் துபாய் சென்றுள்ளனர். இதனால் இந்தியர்களுக்கு மிகவும் பிடித்தமான சுற்றுலா தலமாக துபாய் திகழ்கிறது.
வணிகம் மற்றும் சுற்றுலாப் பயணங்களை மேம்படுத்தும் நோக்கில், ஐந்து வருட காலத்திற்குள் பலமுறை துபாய் சென்றுவர இந்த விசா வழி அமைக்கிறது. இந்த விசா மூலம் இந்தியர்கள் வருடம் ஒன்றுக்கு அதிகபட்சம் 180 நாட்கள் வரை துபாயில் தங்கியிருக்க முடியும். வணிக மற்றும் சுற்றுலா நோக்கங்களுக்காக இந்தியர்கள் அடிக்கடி துபாய் செல்லவே இந்த முன்னெடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைந்துள்ள துபாய், இந்தியாவுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்தியர்களுக்கு எளிதாகவும், நீண்ட காலத்துக்குமான விசா வசதிகளை செய்து தந்துள்ளது.