பிரபலபின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்!
பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் இன்று 80வது வயதில் உயிரிழந்தார். உடல்நலக் குறைவால் கேரளா திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மலையாளத் திரையுலகைச் சேர்ந்த ஜெயச்சந்திரன், தென்னிந்திய திரைப்படங்களுக்கு பல ஹிட் பாடல்களை வழங்கியவர். தமிழில் “மூன்று முடிச்சு,” “அந்த 7 நாட்கள்,” “வைதேகி காத்திருந்தாள்” உள்ளிட்ட படங்களில் புகழ்பெற்ற பாடல்களை பாடியுள்ளார். தமிழ், மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் மொத்தம் 16,000 பாடல்களுக்கும் மேலாக பாடியுள்ளார்.
இவர் தேசிய திரைப்பட விருதுகள், கேரளா மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் போன்ற பல மதிப்புக்குரிய விருதுகளை பெற்றுள்ளார்.
சிறந்த பின்னணி பாடகருக்கான கலைமாமணி விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரது மறைவு திரையுலகத்தில் பேரிழப்பாகக் கருதப்படுகிறது.