மின் கம்பத்தில் மோதிய கார் நான்கு நண்பர்கள் பரிதாப பலி!

0

Kluwang – ஜூன் 28 வெள்ளிக்கிழமை அதிகாலை Jalan Rengam-Simpang Rengam சாலையில் KM24 இல் ஏற்பட்ட கார் கார் விபத்தில் நான்கு நண்பர்கள் உயிரிழந்தனர். இவ்விபத்து நள்ளிரவு 12:10 மணியளவில் அவர்கள் பயணித்த கார் மின் கம்பத்தில் மோதியபோது ஏற்பட்டது.

போலீசார் கூறுகையில், காரை பல்கலைக்கழக மாணவர் முகம்மது அதிபு அகமது ஷாஃபரின் ஓட்டி இருந்தார், அவரின் நண்பர்கள் முகம்மது சியாத் அஸ்மி, அகமது மானன் சைனி மற்றும் நோர் அமினுல் பித்ரி நோர் அஸ்மி உடன் பயணம் செய்தனர். அனைவரும் 21 வயதுடையவர்கள். கார் வேக கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் இருந்து மின் கம்பத்தில் மோதியது.

முகம்மது அதிபு, முகம்மது சியாத் மற்றும் அகமது மானன் தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நூர் அமினுல் பின்னர் எஞ்சே’ பெசர் ஹாஜ்ஜா கல்ல்சோம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த வழக்கு தற்போது போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.