ஜூரோங் தொழிற்சாலை தீ விபத்து 40 பேர் பாதுகாப்பாக வெளியேற்றம்!

0

சிங்கப்பூர் ஜூரோங் மீன் துறைமுகத்தில் (Jurong Fishery Port) உள்ள இரு தொழிற்சாலைக் கட்டிடத்தில் நேற்றுக் காலை (ஜூன் 28) தீ விபத்து ஏற்பட்டு புகை மண்டலம் சூழ்ந்தது காணப்பட்டது . காலை 10:25 மணியளவில் தீயணைப்புத் துறையினருக்கு (Singapore Civil Defence Force – SCDF) தகவல் கிடைத்தது. ஆனால், தீயணைப்புத் துறையினர் வரும் முன்பே சுமார் 40 பேர் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.

தீயணைப்பு உபகரணங்களுடன் Jurong தீயணைப்பு நிலையம் மற்றும் Clementi தீயணைப்பு நிலையத்திலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் புகை மூட்டம் சூழ்ந்த கட்டிடத்திற்குள் நுழைந்து தீயை அணைத்தனர்.

தீ அணைக்கும் பணியில் ஈடுபட்ட ஒரு தீயணைப்பு வீரர் புகையை சுவாசித்ததும் மயக்க முற்றார் முன்னெச்சரிக்கையாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தீ விபத்துக்கான காரணத்தை SCDF தற்போதும் விசாரித்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.