துருக்கியின் ஒரு மருத்துவமனையில் உலங்குவானூர்தி மோதிய விபத்தில் நால்வர் உயிரிழந்தனர்!
ஞாயிற்றுக்கிழமை தென்மேற்கு துருக்கியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
முகலாவில் உள்ள மருத்துவமனையின் மேற்கூரையில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர், அடர்ந்த பனிமூட்டம் காரணமாக அதே கட்டிடத்தின் நான்காவது மாடியில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இரண்டு விமானிகள், ஒரு மருத்துவர் மற்றும் மருத்துவமனை ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கான சரியான காரணம் குறித்து அதிகாரிகள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.