சிங்கப்பூர் ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் உணவுகளை வாங்குபவர்களுக்கு 50 வெள்ளி மதிப்புள்ள வவுச்சர் இலவசம்!
சிங்கப்பூரில் உள்ள ஜுவல் சாங்கி விமான நிலையத்தினுல் பல்வேறு பொழுதுப்போக்கு வசதிகளுடனும் கூடிய உலகின் மிக உயரமான உட்புற நீர்வீழ்ச்சியும் அமைந்துள்ளது.
குறிப்பாக, இயற்கை சூழலில் இது அமைந்திருப்பதால், சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், ஜுவல் விமான நிலையத்தின் கடைகளுக்கும் மற்றும் பூங்காக்களுக்கும் சென்று பொழுதுப்போக்கு அம்சங்களைச் சுற்றிப்பார்த்தும் மகிழ்ந்தும் வருகின்றனர்.
உலகின் முன்னணி நிறுவனங்களின் கடைகளும் இங்கு அமைந்துள்ளதால். இந்த நிலையில், ஜுவல் சாங்கி விமான நிலையம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “ஜுவல் விமான நிலையத்தில் உள்ள உணவகங்களில் வித விதமான உணவுகளைச் சுவையுங்கள். அதற்கான கட்டணத்தை மாஸ்டர்கார்டு (MasterCard) மூலம் செலுத்தி, 50 வெள்ளி மதிப்புள்ள வவுச்சர்களை (Vouchers) பெற்றுக் கொள்ளலாம். எனினும், இந்த சலுகை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும், பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையிலும் இந்த அறிவிப்பை ஜுவல் விமான நிலையம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.