பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பலூன் வெடித்ததால் முகத்தில் தீக்காயங்களுக்கு ஆளானார்!
ஒரு வியட்நாமியப் பெண் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட பலூன் வெடித்து தீப்பிடித்ததால் தீக்காயத்துக்குள்ளானார்.
பிப்ரவரி 14 அன்று நடந்த இந்த நிகழ்வு ஒரு உணவகத்தில் நடைபெற்றது, அங்கு பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. புகைப்படங்கள் எடுக்கும் போது ஒரு கையில் பலூன்களையும், மறுகையில் கேக்கையும் பிடித்திருந்த நிலையில் அவரது பலூன்களில் ஒன்று மெழுகுவர்த்தியில் பட்டதால் வெடித்தது.
இதனால் தீப்பிடித்து, அவரது முகம் கருகியது. உடனே கேக் மற்றும் பலூன்களை விட்டெறிந்து, முகத்தை கைகளால் மூடிக்கொண்டு, தண்ணீரை விட்டு எரிச்சலை குறைத்தார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த நிகழ்வைப் பற்றி சமூக ஊடகங்களில் பகிர்ந்த பெண், கியாங் ஃபாம், இந்த விபத்துக்கு ஆறு நாட்கள் கழித்து தான் அமைதியடைந்ததாகவும், தன் முகம் எரிந்ததால் தன் வாழ்க்கை மற்றும் வேலை எப்படி இருக்கும் என்று கவலைப்பட்டதாகவும் கூறினார்.
உணவகத்தில் இருந்த மற்ற பலூன்களும் தீப்பிடித்தது குறித்து அவர் கூறினார், ஆனால் அந்த பலூன்களில் சாதாரண காற்று இருந்ததால் பெரிய அளவிலான தீ விபத்து ஏற்படவில்லை.
மருத்துவர்கள் கியாங்கிற்கு முகத்தில் நிரந்தர தழும்புகள் இருக்காது என்று உறுதியளித்தனர். அவர் தற்போது விபத்தில் இருந்து குணமடைந்து வருகிறார்.