சிங்கப்பூரில் கனமழை வெள்ள அபாய எச்சரிக்கை!சாங்கி விமான நிலையத்திலும் பாதிப்பு!

0

சனிக்கிழமை சிங்கப்பூரில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் திடீர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர்வள வாரியம் (PUB), வான் லீ சாலை, எண்டர்பிரைஸ் சாலை, ஜாலான் போகோக் செருனை, கிரேக் சாலை, மேல் பாயா லேபார் சாலை, ஜாலான் லோகம், ஜாலான் சீவியூ, மவுண்ட்பேட்டன் சாலை மற்றும் தஞ்சோங் கடோங் தெற்கு போன்ற சில சாலைகள் மற்றும் சந்திப்புகளை மக்கள் தவிர்க்குமாறு கூறியுள்ளது.

நாடு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக காலை 6:54 மணிக்கு இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.

சாங்கி விமான நிலையத்திலும் பாதிப்பு

சாங்கி விமான நிலையத்தில், கனமழை காரணமாக பயணிகள் தங்கள் உடைமைகளுக்காக கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

சாங்கி விமானநிலையத்தின் முனையம் 3 இல், குறைந்தது எட்டு விமானங்களின் புறப்படுதல் நேரம் தாமதமானது. முனையம் 2 இல், துபாய் மற்றும் மியூனிக் நகரங்களிலிருந்து வந்த பயணிகள் உட்பட, பலர் தங்கள் உடைமைகளை பெறுவதில் தாமதத்தை சந்தித்தனர்.

பயணிகளின் சிரமத்தைக் குறைக்கும் பொருட்டு, விமான நிலைய ஊழியர்கள் சிற்றுண்டிகளை வழங்கினர். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இலவசமாக உடைமைகளை வீடு தேடித் தரும் சேவையை அறிவித்தது.

செந்தோசாவில் கோல்ஃப் போட்டியில் தாமதம்

செந்தோசாவில் நடைபெறும் LIV கோல்ஃப் போட்டியும் மழையால் தாமதமானது. இதனால் விளையாட்டு நேரங்களில் மாற்றம் ஏற்பட்டது. ஜான் ரஹ்ம், ப்ரூக்ஸ் கோப்கா போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெறும் இந்த கோல்ஃப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நிறைவடையவுள்ளது.

வானிலை பாதிப்பின் காரணமாக நிகழ்ச்சி நிரலில் ஏற்பாட்டாளர்கள் சில மாற்றங்களைச் செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.