கவச வாகனத்தில் ஒட்டிக்கொண்டிருந்த அந்த நபரை சிங்கப்பூர் காவல்துறை கைது செய்தது!

0

வெள்ளிக்கிழமை அதிகாலை, சிங்கப்பூரின் ஸ்டாம்ஃபோர்ட் சாலையில் ரோந்து சென்று கொண்டிருந்த உதவி போலீஸ் அதிகாரிகள் அங்கே 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், அவர்களது நகரும் கவச வாகனத்தின் பின்புறத்தில் தொங்கிக் கொண்டிருந்ததைக்கண்டனர். பின்னர் தெரியவந்ததாவது, அந்த இளைஞர் மதுபோதையில் இருந்ததால், குழப்பம் ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டார்.

காலை சுமார் 3 மணியளவில், குயின் தெருவில் அதிகாரிகள் தங்கள் வாகனத்தில் பணத்தை ஏற்றிக்கொண்டிருந்தபோது, போதையில் இருந்த அந்த நபர் வாகனத்திற்குள் நுழைய முயற்சித்துள்ளார்.

அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு அதிகாரிகள் கூறிய பிறகும், அவர்கள் ஸ்டாம்ஃபோர்ட் சாலை வழியாக சுமார் 850 மீட்டர் தூரம் சென்றபோது, அந்த நபர் வாகனத்தின் பின்புற கதவில் தொற்றிக்கொண்டே பயணித்துள்ளார்.

இதை கவனித்த அதிகாரிகள் வாகனத்தை நிறுத்தவே, அந்த இளைஞர் அங்கிருந்து நடந்து சென்றுள்ளார். காலை 4.20 மணியளவில் நடந்த இந்த சம்பவம் போலீசாருக்கு தெரியப்படுத்தப்பட்டு, இரண்டு மணி நேரம் கழித்து ஸ்டாம்ஃபோர்ட் சாலையில் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

குடித்துவிட்டு பொது இடத்தில் குழப்பம் ஏற்படுத்தியதற்காக சனிக்கிழமை அவர் நீதிமன்றத்தில் ஆஜராக இருக்கிறார். அவருக்கு அதிகபட்சமாக ஆறு மாதம் சிறைத்தண்டனை, S$1,000 வரை (US$740) அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

Leave A Reply

Your email address will not be published.