பேரழிவுகளுக்கு மத்தியில் நம்பிக்கை புத்தாண்டு தின நிலநடுக்கத்திற்குப் பிறகு வயதான பெண்மணியின் அதிசய மீட்பு!
புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்கு பின் குறைந்தது 128 பேர் உயிரிழந்தனர், 560 பேர் காயமடைந்தனர், மேலும் 195 நபர்களை இன்னும் காணவில்லை, உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிப்பதற்கான நம்பிக்கைகள் குறைந்து வருகின்றன. இருப்பினும், ஜனவரி 6 அன்று, நிலநடுக்கத்திற்குப் பிறகு 124 மணிநேரத்திற்குப் பிறகு, இடிந்து விழுந்த வீட்டின் இடிபாடுகளுக்கு நடுவில் , 90 வயதுடைய ஒரு பெண் உயிருடன் மீட்கப்பட்டார் பலவீனமான இதய துடிப்புடன் அதிசயமான முறையில் காணப்பட்டார் மீட்புக் குழுக்கள் பணிகள் தொடர்கிறது.