சிங்கப்பூரில் Driving வேலைக்கு எப்படி வருவது? இந்திய Driving Licence உடன் வாகனம் ஓட்டலாமா?

0

சிங்கப்பூரில் வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் பெரும்பாலான நபர்கள் Driving வேலைக்கே விண்ணப்பிக்கின்றார்கள். இந்த நிலையில் வேலைக்கு வருபவர்கள், எப்படி வேலை எடுத்துக்கொள்ள முடியும், எவ்வளவு சம்பளம் கிடைக்கப்பெறும், Part Time வேலை பார்க்கலாமா என்ற கேள்விகள் எல்லாம் அவர்களுக்குள் உள்ளது.

சிங்கப்பூரில் PSA வேலைக்கு Skill Test அடிக்காமல் எந்தந்த வேலைகளுக்கு வர முடியும்

சிங்கப்பூரில் டெலிவரி சேவைகள், ஏனைய பணியாளர்களை அழைத்து சென்று இறக்கி விட Drivers தேவைப்படுகிறார்கள். வேறொரு நாட்டு Driving Licence உடன் சிங்கப்பூரில் நீங்கள் வேலை செய்ய அமர்த்தப்படமாட்டீர்கள். PSA (Port of Singapore Authority) இல் மட்டுமே நீங்கள் இந்திய உரிமத்துடன் பணிபுரிய வரலாம்.

உங்களால் நேரடியாக சிங்கப்பூருக்கு Driver ஆக வர முடியாது. நீங்கள் PCM அல்லது Work Pass அனுமதியுள்ள ஒரு தொழிலாளியாக நாட்டிற்குள் நுழையலாம். இங்கு வேலை செய்யும் போது, Driving பயிற்சியில் சேர வேண்டும். Licence கிடைத்ததும், நீங்கள் வாகனம் ஓட்ட ஆரம்பிக்கலாம்.

பெப்ரவரியில் சிங்கப்பூர் வருபவரா இருந்தால் இந்த ஆவணங்களை கட்டாயம் வைத்திருங்கள்

நீங்கள் Work Permit உடன் சிங்கப்பூருக்கு வந்தால் 1500 முதல் 2500 சிங்கப்பூர் டாலர்கள் வரை ஊதியம் வழங்கப்படும். SPass இல் வேலை செய்வதற்கு S$3000க்கு மேல் வழங்கப்படும். ஒரு பணியாளராக உங்களை பணியமர்த்தும்போது, சம்பளம் ஆனது நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும்.

Leave A Reply

Your email address will not be published.