Work Permitயில் சிங்கப்பூர் சென்று SGD $2,500 வரையில் சம்பளம் பெறுவது எப்படி? என்ன செய்ய வேண்டும்!

0

சிங்கப்பூரில், வேலை தேடுபவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம் – உயர் கல்வித் தகுதி உள்ளவர்கள் மற்றும் குறைந்த கல்வித் தகுதி உள்ளவர்கள்.

பலருக்கு, தங்கள் கல்விநிலைக்கு ஏற்ற நல்ல வேலையைக் கண்டுபிடிப்பது சிங்கப்பூரில் சவாலாக இருக்கலாம். விரைவில் சிங்கப்பூரில் வேலைக்குச் சேர வேண்டிய நெருக்கடி இருக்கும், இல்லையெனில் முகவர்கள் மூலம் கிடைத்த வேலையையும் இழக்கும் அபாயம் ஏற்படும்.

உயர் கல்வித் தகுதியுடன் சிங்கப்பூர் வருபவர்கள், சுமார் $2,500 சம்பளம் வரை பெறலாம். நீங்கள் ‘Work Permit’ மூலம் சிங்கப்பூரில் பணிபுரியத் தொடங்கினால், skill test அடித்து வரவேண்டியிருக்கும். ஆரம்பத்தில், நீங்கள் சிங்கப்பூரில் ஒரு நாளைக்கு $18 முதல் $20 வரை சம்பாதிக்கலாம்.

Overtime வேலை செய்தால், மாதம் $700 முதல் $800 வரை கூடுதலாக சம்பாதிக்க முடியும். ‘Work Permit’-ல் பணிபுரியும் போது, உங்கள் முதலாளி பொதுவாக உங்கள் பெரும்பாலான செலவுகளை கவனித்துக் கொள்வார். அதனால், தனியாக அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்காது.

சிங்கப்பூருக்கு வந்த பிறகு அந்தத் திறனாய்வுத் தேர்வில் தோல்வியுற்று உங்கள் நாட்டிற்குத் திரும்பினால், அடுத்த முறை சிங்கப்பூரில் நல்ல வேலை வாய்ப்புகளைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கலாம். இது ‘Work Permit’ முறையில் இருப்பதால் ஏற்படும் ஒரு பின்னடைவு.

சிங்கப்பூரில் வேலை தேடும்போது, உங்களின் ஓய்வு நேரத்தில், செய்யும் வேலைக்கு தொடர்புடைய ஏதாவதொரு course படிக்கலாம். உதாரணமாக, கட்டுமானத் துறையில் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. எனவே, நீங்கள் கட்டுமானத் துறையில் பணிபுரிந்தால், சிங்கப்பூரில் Diploma படிப்பைத் தொடர்வது நல்லது.

Diploma படிப்பை முடிக்க கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகும். பகுதி நேர வகுப்புகளாக வார இறுதி அல்லது மாலை நேரத்தில் இதைப் படிக்கலாம். டிப்ளமோ படிப்பு செலவு பொதுவாக $2,200 முதல் $2,800 வரை இருக்கும். வகுப்பின் உள்ளடக்கத்தைப் பொறுத்து இது மாறுபடும்.

சிங்கப்பூரில் நல்ல வேலையைக் கண்டுபிடிக்க, நேரடியாக சிங்கப்பூர் வருவதே சிறந்த வழி. பெரும்பாலானோருக்கு இதுவே சிங்கப்பூரில் தற்போதைக்கு நிரூபிக்கப்பட்ட வெற்றி வழிமுறையாக உள்ளது. கம்பெனிகளே படிப்புக்கான செலவை ஏற்றுக்கொள்வதும் உண்டு. சில நேரம் நீங்களே செலவு செய்ய வேண்டியிருக்கும்.

கம்பெனி பணத்தில் இந்தப் course படித்தால், அந்த கம்பெனிக்கு ஒரு குறிப்பிட்ட காலம் கட்டாயம் வேலை செய்ய வேண்டியிருக்கும். மூன்று வருடம் வேலை செய்து, Diploma படித்த பிறகு கைகளில் நல்ல திறமைகளுடன், இன்னும் அதிக சம்பளம் பேரம் பேச முடியும்.

சிங்கப்பூருக்கு Diploma course வந்தாலும் நல்ல வேலை கிடைக்கும். யார் அதிகம் course முடித்திருக்கிறார்களோ, அவர்களுக்கே அதிகமான வெற்றி வாய்ப்புகள். அதனால், சிங்கப்பூர் வந்து தங்களுக்குப் பிடித்த வேலையில் நிலைத்திருப்பவர்கள் நல்ல சாதனையாளர்களாக இருப்பார்கள். பிடித்தமான, உங்களுக்குப் பொருத்தமான ஒரு வேலையைக் கண்டுபிடிக்க நன்கு முயற்சி செய்யுங்கள். அந்த முயற்சி நிச்சயம் பலன் தரும்.

Leave A Reply

Your email address will not be published.