டெங்கு பாதிப்பை குறைக்க புதுமையான திட்டம் கொசுவை பிடித்துத் தந்தால் பணப்பரிசு!
பிலிப்பைன்ஸில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த ஒரு புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நோயை பரப்பும் கொசுக்களை பிடித்து அரசிடம் சமர்ப்பிக்கும் பொதுமக்களுக்கு பணம் வழங்கப்படும். கொசுக்களை உயிருடனோ அல்லது கொன்றோ கொண்டுவந்து தரும் ஒவ்வொரு 5 கொசுக்களுக்கும் 3சிங்கப்பூர் டாலர் வழங்கப்படும்.
இந்த திட்டம் பிலிப்பைன்ஸின் தலைநகரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 28,234 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த திட்டம் மூலம் கொசு பிரச்சினையை குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்களும் இதில் பங்கேற்று கொசுக்களை பிடித்து தருவதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம். இது டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த ஒரு பயனுள்ள வழியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.