சிங்கப்பூர்வரும் நாட்களில் சிங்கப்பூர் செல்லும் போது RMI Certificate கட்டாயமா? யாரிடம், எப்படி எடுப்பது!

0

தற்போது சிங்கப்பூருக்கு நன்றாகப் படித்து டிகிரி எடுத்தோர்களும் வருகிறார்கள், அதே போன்று Diploma மற்றும் ஏனைய Certificate வைத்துக்கொண்டும் வருகிறார்கள்.

சிலர், போலியான Certificate எடுத்துக்கொண்டு சிங்கப்பூருக்கு வேலைக்கு வருகிறனர்.

போலியான Certificate எடுத்துக்கொண்டு சிங்கப்பூர் வரும் போது அவர்கள் பிடிபடும் சந்தர்ப்பத்தில் சிறை செல்லக்க்கூட நேரிடும்.

எனவே இந்த பிரச்சனைகளைத் தீர்க்கும் முகமாக மனிதவள அமைச்சகத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு முறைதான் இந்த RMI ஆகும்.

RMI (Risk Management intelligence) என்பது உங்களது கல்வித்தகைமைகளை மனிதவள அமைச்சகத்தினால் உறுதிப்படுத்தும் ஒரு படிமுறை ஆகும்.

இந்த படிமுறையின் பின்னர் MOM இனால் உறுதிப்படுத்திய RMI Certificate வழங்கப்படும்.
சிங்கப்பூர் செல்லும் போது இந்த RMI Certificate தேவையா என கேட்டால், RMI Certificate எடுத்துக்கொள்ளுவது மிகவும் சிறந்தது.

ஏனெனில், உங்களது Visa Approve, விரைவாக வேலைக்கு சேர்வது போன்ற பல சிறப்பம்சங்களை RMI Certificate எடுப்பது மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.

RMI Certificate எடுத்து வைத்திருப்பவர்களுக்கு கம்பனிகள் முன்னுரிமை அளிக்கின்றன.

ஏனென்றால், தற்போது போலி Certificate வைத்துக்கொண்டு சிங்கப்பூர் நுழைவு அதிகமான காரணத்தினால் RMI Certificate எடுத்து வைத்திருப்பதன் முக்கியத்துவம் அதிகரிக்கிறது.

மேலும், சில கம்பனிகள் இந்த RMI Certificate ஐ கட்டாயமாக கேட்கின்றன. 

இனி வரும் காலங்களில், எல்லா கம்பனிகளும் RMI Certificate கேட்கும் நிலைமைக்கு கூட வரலாம்.

நாட்டிலிருந்து சிங்கப்பூர் செல்லும் போது RMI Certificate எடுத்துக்கொண்டு செல்லலாம், அதே போன்று சிங்கப்பூர் சென்றும் பெற்றுக்கொள்ளலாம்.

நாட்டிலிருந்து சிங்கப்பூர் செல்லும் போது RMI Certificate எடுத்துத் செல்லுவது பொருத்தமானது, சிங்கப்பூர் சென்று RMI Certificate எடுக்கும் போது சில சமயங்களில் Certificate கிடைக்க கால தாமதம் ஆகும் போது வேலைக்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளது.

RMI Certificate ஐ மனிதவள அமைச்சின் வெப்சைட்டில் RMI பிரிவுக்கு சென்று நீங்களாகவே அப்ளை செய்து பெற்றுக்கொள்ள முடியும்.

அதே போன்று ஏஜென்சி மூலமாக நீங்கள் செல்லும் போது அவர்களின் மூலமாகவும் RMI Certificate எடுத்துக்கொள்ள முடியும்.

அமைச்சின் வெப்சைட்டில் அப்ளை செய்வதெனில் இதற்கு S$98.10 வரை செலவாகும். மேலும், ஏஜென்சி மூலமாக எடுக்கும் போது சற்று அதிகமாக செலவு பன்ன வேண்டி வரலாம்.
சரியான முறைப்படி உங்களுக்கு RMI Certificate எடுக்கத் தெரியாதெனில் ஏஜென்சி மூலமாக பெற்றுக்கொள்வது சிறந்தது.

ஏனெனில், ஏதேனும் தகவல்களை தவறாக கொடுக்கும் பட்சத்தில் RMI Certificate பெற்றுக் கொள்வதற்கு கால தாமதம் ஆகலாம். 

ஏஜென்சி மூலம் எடுக்கும் போது அவர்கள் சரியான முறையில் அப்ளை செய்து Certificate ஐப் பெற்றுக் கொடுப்பார்கள்.

Leave A Reply

Your email address will not be published.