ரத்த தானம் மூலம் 2.4 மில்லியன் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ஜேம்ஸ் ஹாரிசன் காலமானார்!
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் (88), ரத்த தானத்தின் மூலம் 2.4 மில்லியன் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய மகத்தான சாதனை புரிந்தவர், கடந்த பிப்ரவரி 17 அன்று நியூ சவுத் வேல்ஸில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. “Man with the Golden Arm” என அழைக்கப்பட்ட ஹாரிசன், தனது வாழ்க்கையை ரத்த தானத்திற்கு அர்ப்பணித்துள்ளார்.
1954 ஆம் ஆண்டில், 18 வயதில் முதல் ரத்த தானம் வழங்கத் தொடங்கிய அவர், 2018 ஆம் ஆண்டு வரை 81 வயதாக இருக்கும் வரை மொத்தம் 1,173 முறை ரத்த தானம் செய்துள்ளார்.
அவரது ரத்தத்தின் பிளாஸ்மாவில் உள்ள அரிய வகை ஆன்டி-டி (Anti-D) எனும் Antibody, தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவும் தீங்கிழைக்கும் Antibody களை தடுக்கும் சக்தி கொண்டது. இதன் மூலம் உலகம் முழுவதும் குழந்தைகள் உயிர் காப்பாற்றப்பட்டன.
2005 முதல் 2022 வரை, அதிக ரத்த பிளாஸ்மா தானம் செய்ததற்கான உலக சாதனையை ஹாரிசன் பிடித்திருந்தார். பின்னர், அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் அந்த சாதனையை முறியடித்தார். அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் சமூக ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.